GOAT
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நேற்று வெளிவந்த படம் GOAT. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் விஜய் மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
பல நட்சத்திரங்கள் நடித்ததால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் GOAT, இதுவரை தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
வசூல்
அதன்படி, இந்த படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த படம் எவ்வளவு வசூல் செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.