பூஜா ஹெக்டே
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் தமிழில் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே வந்துள்ளது. ஆனாலும் கூட தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இவர் திரையுலகிற்கு அறிமுகம் ஆனது முகமூடி எனும் தமிழ் திரைப்படமாக இருந்தாலும், தெலுங்கில் தான் இவருக்கு முன்னணி நடிகை எனும் அந்தஸ்து கிடைத்தது. இதன்பின் மீண்டும் தமிழில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. அதே போல் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வெளிவந்த கடந்த 7 திரைப்படங்களும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது.
அடுத்ததாக பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் நடிகை பூஜா ஹெக்டே.
முதல் சம்பளம்
இந்த நிலையில், பூஜா ஹெக்டே, தான் நடித்த முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படம் தான் பூஜா ஹெக்டேவின் முதல் திரைப்படமாகும். இப்படத்திற்காக பூஜா ரூ. 30 லட்சம் சம்பளமாக வாங்கினார் என கூறப்படுகிறது.