Tuesday, March 25, 2025
Homeசினிமாமுதல் ஹிந்தி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளர் இந்த முன்னணி நடிகரா

முதல் ஹிந்தி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளர் இந்த முன்னணி நடிகரா


சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப்பின் இவருடைய ரேஞ் வேற லெவலில் போய்விட்டது.

உலகளவில் இப்படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது அமரன். சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது எஸ்கே 23 மற்றும் எஸ்கே 25 ஆகிய படங்கள் உள்ளன.

முதல் ஹிந்தி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளர் இந்த முன்னணி நடிகரா | Sivakarthikeyan Talk About First Hindi Movie

இதில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 23வது படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார்.

ஹிந்தி படம்

கோலிவுட் திரையுலகில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு இதுவரை பலரும் சென்றுள்ளனர். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் ஹிந்தி படத்தை தயாரிக்க நான் தயார் என நடிகர் அமீர் கான் கூறியதாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.

முதல் ஹிந்தி படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளர் இந்த முன்னணி நடிகரா | Sivakarthikeyan Talk About First Hindi Movie

இந்த பேட்டியில் “அமீர் கான் சாரை நான் சிலமுறை சந்தித்து இருக்கிறேன். ‘உங்களுடைய முதல் ஹிந்தி படத்தை நான் தயாரிக்கிறேன், நல்ல கதை இருந்தால் சொல்லுங்க’ என அமீர் கான் கூறினார்” என சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments