முத்தழகு சீரியல்
தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் சன் மற்றும் விஜய் டிவி தொடர்கள் தான் அதிகம் வரவேற்பு பெற்று வருகின்றன.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் முத்தழகு. விவசாய பெண்ணின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கினாலும் இடையே கதையே வேறொரு பக்கம் மாறிவிட்டது.
இரண்டு மனைவிகளை வைத்துள்ள ஒருவரின் கதையாக முத்தழகு சென்றது. ஷோபனா, வைஷாலி, ஆஷிஷ், லட்சுமி வாசுதேவன் என பலர் நடித்து வந்தனர்.
கடைசி நாள்
4 வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி நாள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்து Last Day Shoot As Anjali என வைஷாலி பதிவு செய்துள்ளார்.
நீதிமன்றனத்தில் ரெஜினா விசாரணைக்கு நிற்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. வைஷாலி வெளியிட்ட வீடியோவிற்கு ரசிகர்கள் கலவையான கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.