சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது தங்க நகை எப்படி கவரிங் நகையாக மாறியது என்பது தான் பரபரப்பான விஷயமாக சென்று கொண்டு இருக்கிறது.
இதில், தங்க நகை கவரிங் நகையாக மாறியதற்கு காரணம் தனது அம்மா விஜயா மற்றும் அண்ணன் மனோஜ் தான் என முத்துவும் மீனாவும் சந்தேகப்பட்டுவிட்டனர். ஆனால், விஜயா நகை எப்படி மாறியது என எனக்கு தெரியாத என கூறிவிட்டார்.
அடுத்த நடக்கப்போவது இதுதான்
அதுமட்டுமின்றி முத்து, மீனா தான் இதற்கு காரணம் என அந்த பழியை அவர்கள் மீது போட பார்த்தார். இந்த நிலையில், அடுத்ததாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, காவல் துறையில் மனோஜ் தன்னுடைய பொருட்கள் எப்படி தன்னிடம் இருந்து பறிபோனது, அதனால் 3 லட்சம் ரூபாய் எப்படி இழந்தேன் என கூற, அதை முத்து வீடியோ எடுத்துவிடுகிறார். இதன்மூலம் தங்க நகை கவரிங் நகையாக மாற மனோஜ் தான் காரணம் என முத்து உறுதி செய்துவிட்டார்.
இந்த நிலையில் அடுத்து முத்து செய்யப்போவது என்ன என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று.