சிறகடிக்க ஆசை
தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை சீரியல். விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரின் கதையில் இப்போது முத்து-மீனா கொலு வைக்கும் வேலைகளை கவனித்து வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் விஜயாவிடம் அவரது நடன பள்ளிக்கு வந்துள்ள இருவர் தவறாக நடந்து கொள்கிறார்கள் என மீனா கூறியதை நம்பாதவர் இப்போது கண்முன் பார்த்ததால் உஷாராகிறார்.
இங்கே மனோஜ் தன்னை மிரட்டி கடிதம் அனுப்பும் நபர் என்பதை கண்டுபிடிக்க ஒரு கோவிலுக்கு செல்கிறார். அங்கு ரோஹினியை பணம் கேட்டு மிரட்டும் நபர் சாமியார் வேடம் போட்டு மனோஜிற்கு இப்படி கடிதம் அனுப்புவது முத்து என கூறிவிடுகிறார்.
இன்றைய எபிசோடில் மனோஜ் காட்சிகள் வருகின்றன.
புதிய புரொமோ
முத்து தான் இந்த வேலையை செய்வது என்பதை நம்பி மனோஜ் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை அனைவரிடமும் கூறி சண்டையில் ஈடுபடுகிறார். முத்துவும் கோபப்பட்டு மனோஜை அடிக்க செல்ல மீனா தடுக்கிறார்.
பின் நீங்கள் தான் கடிதம் எழுதி அனுப்புகிறீர்கள் என்று கூறியவர் தான் இந்த வேலையை செய்துள்ளாரோ என எனக்கு சந்தேகமாக இருப்பதாக கூறுகிறார் மீனா. இதைக்கேட்டு ரோஹினி ஷாக் ஆகிறார்.
இந்த புதிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் ரோஹினி இந்த முறையாவது சிக்குவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.