சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் டாப் சீரியலாக உள்ளது சிறகடிக்க ஆசை தொடர்.
நகைக்கான பிரச்சனை முடிவுக்கு வர அண்ணாமலையும், விஜயாவிடம் பேசிவிட்டார். மனோஜ் தற்போது ரூ. 2 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுக்க அதை வைத்து முத்து-மீனா ஒரு புதிய கார் வாங்கிவிட்டனர்.
அதனை ஓட்ட ஒரு நபரையும் போட்டு தொழிலை தொடஙகிவிட்டனர்.
இன்றைய எபிசோடில் மனோஜ் என்னை யாரோ ஏமாற்ற போகிறார்கள் என சாமியாரிடம் சென்று காமெடி செய்து வருகிறார்.
மீனா பந்தயம்
மீனாவிடம் ஒரு பூ கடை பெண்மணி நீ பெசரட்டு செய்வியா, அதெல்லாம் நல்லா தான் செய்வ, அதை உன் புருஷனுக்கு செய்து கொடு, அவர் பாராட்டுகிறாரா என்பதை பார்ப்போம் என்கிறார்.
அதெல்லாம் புருஷன் பாராட்டுவார் என மீனா கூற ரூ. 50 பந்தயம் என ஒரு பெண் கூறுகிறார்.
மீனாவோ எனது புருஷனை நம்பி ரூ. 5 ஆயிரம் கூட பந்தயம் என கூறுகிறார். ஆனால் முத்து சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார் என புரொமோவில் தெரிகிறது.