சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் விஜயாவின் கலாட்டாக்கள் நடந்தது.
எல்லோரும் வேலை வேலை என வெளியே சென்றுவிட்டு என்னை வீட்டுவேலை செய்ய வைக்கிறார்கள், நானும் எனது திறமையை காட்டி சம்பாதிக்கிறேன் என நடன பள்ளி தொடங்கினார்.
ஆனால் யாருமே வரவில்லை, அவரை கஷ்டப்பட வைக்க வேண்டாம் என முத்து-மீனா நடனம் கற்றுக்கொள்ள சென்றனர். அவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுக்க விஜயா கழுத்து ஒரு பக்கம் ஆனது.
அந்த கலாட்டா முடிய ரோஹினி மலேசியா மாமாவால் வீட்டில் சிக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் சப் என முடிந்துவிட்டது.
அடுத்த கதைக்களம்
தற்போது அடுத்த வாரத்திற்கான புதிய புரொமோவில் அண்ணாமலை வீட்டின் மேலே ஒரு ரூம் கட்ட ஏற்பாடு செய்கிறார், அதற்கு ரூ. 5 லட்சம் வரை ஆகும் என்கின்றனர்.
பணத்திற்கு வீட்டு பத்திரத்தை வைக்க வேண்டும் என அண்ணாமலை கூற எனது அப்பா எனக்கு கொடுத்த வீட்டு பத்திரித்தை என்னால் தர முடியாது என விஜயா கூறுகிறார்.
இதனை வைத்து ரோஹினி கிண்டல் செய்ய மீனா, எனது கணவர் சம்பாதித்து மேலே வீடு கட்டுவார் இது சபதம் என அண்ணாமலையிடம் கூறுகிறார். மீனா கூறியதை கேட்டு ரோஹினி மற்றும் மனோஜ் ஷாக் ஆகிறார்கள்.