Friday, December 6, 2024
Homeசினிமாமுத்துவை வெச்சி செஞ்ச விஜய் சேதுபதி.. தலைகனத்தில் ஆடியதற்கு விளாசல்!

முத்துவை வெச்சி செஞ்ச விஜய் சேதுபதி.. தலைகனத்தில் ஆடியதற்கு விளாசல்!


பிக் பாஸ் 8ம் சீசன் கிட்டத்தட்ட ஒரு மாதத்தை தொட்டுவிட்டது. இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக போட்டியாளர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

அது ஒருபுறம் இருக்க கேப்டனாக இருந்த முத்து குமார் செய்த சில விஷயங்கள் வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் ஷோ பார்க்கும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் முத்து குமாரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி பேசும்போது முத்து குமாரை கேள்வி கேட்டு வறுத்தெடுத்துவிட்டார்.

“உங்க மீது இருக்கும் குறைகள் என்ன என சொல்லுங்க என எல்லோரையும் உட்கார வெச்சி கேப்பீங்க. அதற்கு பிறகு நான் இப்படி தான், மாற்றிக்கொள்ள மாட்டேன் என சொல்றீங்க. மாற மாட்டேன் என முன்பே முடிவெடுத்துவிட்டு எதற்காக இப்படி எல்லோரிடமும் கேட்கணும்” என விளாசினார் விஜய் சேதுபதி.

“மேலும் நீங்கள் அழைத்து சிலர் வரவில்லை என்றதும், பாதியில் வந்தவர்களை போக சொல்வீங்க. உங்களுக்கு மட்டும் தான் சுயமரியாதை இருக்கு, அவங்களுக்கு இல்லையா.”

“கேப்டன் பதவி ஒரு வாரம் மட்டும் தான். மற்றபடி நீங்களும் போட்டியாளர் தான்.”

யாகாவாராயினும் நாகாக்க .. அந்த திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லுங்க.. அதை உங்களுக்கே சொல்லிக்கோங்க.

தலைக்கனம் 

தலையில் கிரீடம் வைக்கும்போது கொஞ்சம் கனம் ஏறும். தெரியுமா. தலைக்கனம். அதை பார்த்து கையாள்பவன் தான் தலைவன். உங்களுக்கு தலைக்கனம் ஏறியதால் ஏற்பட்ட பாதிப்பு உங்களுக்கு தெரிந்ததா?

இவ்வாறு விஜய் சேதுபதி முத்து குமாரனை விளாச, அவர் என்ன பதில் சொல்வது என தெரியாமல் தலைகுனிந்து இருந்தார். 

முத்துவை வெச்சி செஞ்ச விஜய் சேதுபதி.. தலைகனத்தில் ஆடியதற்கு விளாசல்! | Vijay Sethupathi Blasts Muthukumaran In Bigg Boss

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments