Friday, September 20, 2024
Homeசினிமாமுத்து பற்றி உணர்ச்சிவசமாக பேசும் மீனா.. வெற்றி பெற போவது யார்? சிறகடிக்க ஆசை புரொமோ

முத்து பற்றி உணர்ச்சிவசமாக பேசும் மீனா.. வெற்றி பெற போவது யார்? சிறகடிக்க ஆசை புரொமோ


சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் ஃபேவரைட் தொடராக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது, இந்த தொடர் எதார்த்தமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.



இந்த தொடரின் போன வார எபிசோடில் ரவி தனது கம்பெனி நடத்தும் போட்டியை பற்றி வீட்டில் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து, மனோஜ் மற்றும் முத்து இடையே வழக்கம் போல் வாக்குவாதம் நடக்கிறது, பின் இறுதியில் இருவரும் கலந்துகொள்ள ஒப்புக்கொள்கிறார்கள்.


அதை தொடர்ந்து இந்த வார புரொமோவில், முதல் சுற்றில் சிறந்த ஜோடி யார் என்பதற்கான போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்றில் உங்கள் பார்ட்னர் பற்றி எப்படி நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை குறித்து ஒரு போட்டி நடைபெறுகிறது.

வெற்றி பெற போவது யார்



அந்த போட்டியில், முதலில் மனோஜ் மற்றும் ரோகினி கலந்து கொள்கிறார்கள் அப்போது மனோஜ் ரோகினி தன்னிடம் எந்த ஒரு ரகசியத்தையும் மறைக்கமாட்டார் என்று கூறுகிறார் அதனை கேட்ட ரோகிணி அமைதியாக உள்ளார்.

முத்து பற்றி உணர்ச்சிவசமாக பேசும் மீனா.. வெற்றி பெற போவது யார்? சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Next Week Promo


பிறகு ரவி மற்றும் ஸ்ருதி கலந்து கொள்கிறார்கள் அப்போது ரவி என் அப்பாவிற்கு மூன்று மகன்கள், அதே போல் எனக்கும் மூன்று பிள்ளைகள் வேண்டும் என்று கூறுகிறார் அதனை கேட்ட ஸ்ருதி கோவத்தில் எழுந்து நிற்கிறாள்.

முத்து பற்றி உணர்ச்சிவசமாக பேசும் மீனா.. வெற்றி பெற போவது யார்? சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Next Week Promo



கடைசியாக முத்து மற்றும் மீனா இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள் அப்போது மீனா உணர்ச்சிவசமாக முத்து தன்னை தன் அப்பாவை போல் பார்த்து கொள்வதாக கூறுகிறாள். மேலும் என் புருஷன் மட்டும் போதும் என கூறுகிறாள் இதனை கேட்டு அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

முத்து பற்றி உணர்ச்சிவசமாக பேசும் மீனா.. வெற்றி பெற போவது யார்? சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Next Week Promo

இந்த நிலையில், யார் இந்த போட்டியில் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பற்றி வரும் எபிசோடில் காணலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments