Sunday, September 8, 2024
Homeசினிமாமுன்னணி நடிகரை பாராட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார்

முன்னணி நடிகரை பாராட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார்


நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ், கன்னடம்,தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி விஜய்குமார். இவர் தமிழில் தேவதையை கண்டேன், பிரியமான தோழி போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த ஸ்ரீதேவி தற்போது மீண்டும் தெலுங்கு படத்தில் நடிகர் பிரபாசுடன் நடிக்கவிருக்கிறார். பிரபாஸின் முதல் படமான ஈஸ்வர் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார்.

அந்த விஷயத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.. முன்னணி நடிகரை பாராட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் | Sridevi Vijaykumar About Prabhas

தற்போது, அதை தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் சுந்தரகாண்டா என்ற படத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபாசுடன் இணைந்து நடித்த ஸ்ரீதேவி அவரை பாராட்டி பேசியுள்ளார்.

ஸ்ரீதேவி விஜய்குமார் பேச்சு

அதில், பிரபாஸ் எப்போதுமே ஒரே குணத்துடன் இருக்கிறார். முன்பு, அவர் எவ்வாறு எளிமையாக இருந்தாரோ அதே போல் இப்போதும் இருக்கிறார்.

அந்த விஷயத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.. முன்னணி நடிகரை பாராட்டிய நடிகை ஸ்ரீதேவி விஜய்குமார் | Sridevi Vijaykumar About Prabhas



தற்போது இவ்வளவு பெயர் மற்றும் புகழுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அவருடைய குணத்தில் எந்த விதமான மாற்றமும் தெரியவில்லை என்று ஸ்ரீதேவி பாராட்டி உள்ளார். மேலும், அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் கூறினார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments