விஜய் சேதுபதி
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான படம் மகாராஜா.
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 107 கோடி வரை வசூல் செய்தது. இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.
இப்படத்தை தொடர்ந்து, விஜய் சேதுபதிக்கு ராம் சரணுடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மகாராஜா படத்தை காரணமாக கூறி அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் என்ன
ராம் சரணின் படத்தில் ஏன் நடிக்க மறுத்தார் என்று பார்த்தால், விஜய் சேதுபதி ஏற்கனவே உப்பெனா படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருப்பார்.
அதை தொடர்ந்து, மகாராஜா படத்திலும் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இந்த நிலையில், இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், தொடர்ந்து தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு சிறு தயக்கம் உள்ளதாகவும் மற்ற கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புவதால் ராம் சரண் படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க மறுத்ததாக உப்பெனா படத்தின் இயக்குனர் புச்சி பாபுவிடம் கூறியுள்ளார்.