நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு மீண்டும் மார்க்கெட்டை கைப்பற்றி ஏராளமான படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
விஜய் உடன் லியோ படத்தில் நடித்த அவர் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி, சிரஞ்சீவி உடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.
சல்மான் கானுக்கு ஜோடி
இந்நிலையில் அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் ஹிந்தியில் சல்மான் கானை வைத்து இயக்கும் The Bull என்ற படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார்.
விரைவில் அதன் ஷூட்டிங் ஸ்பெயின் நாட்டில் தொடங்க இருக்கிறது. அதில் பங்கேற்க சல்மான் உடன் திரிஷாவும் செல்ல இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
திரிஷா மீண்டும் படுபிஸியாக படங்களில் நடித்து வருகிறது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.