Sunday, December 8, 2024
Homeசினிமாமுன்னாள் கணவரை குறித்து பேசிய ஸ்ரீதிகா.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்!

முன்னாள் கணவரை குறித்து பேசிய ஸ்ரீதிகா.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்!


ஸ்ரீதிகா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம், மகராசி, குலதெய்வம் போன்ற சீரியல்களில் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை ஸ்ரீதிகா. இவர் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டர் மூலமாக சின்னத்திரையில் பெரிய அளவில் பிரபலமடைந்தார்.



இந்த நிலையில், மகராசி சீரியலில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்தது. அந்த திருமணத்தில் கூட ஸ்ரீதிக்காவும் அவருடைய முதல் கணவரும் கலந்து கொண்டனர்.

இருவரும் முதல் திருமணத்தில் இருந்து விலகி இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நிலையில், எதற்காக தன் முதல் கணவரை விவாகரத்து செய்தார் என்பதை பற்றி பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிகா.

பேட்டி


அதில், ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் இருவருமே தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும். தன் முன்னால் கணவர் மிகவும் நல்லவர் தான் அவரை பற்றி எந்த குறையும் சொல்ல முடியாது. ஆனால் எனக்கும் அவருக்கும் திருமண பந்தத்தில் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது.



மேலும், நான் சின்ன வயதில் திருமணம் செய்துகொள்ளவில்லை எனக்கு 30 வயதில் தான் திருமணம் நடந்தது அதுவும் வீட்டில் பார்த்து தான் என் முதல் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஆனால், நான் எதிர்பாத்தது போல என் திருமண வாழ்க்கை அமையவில்லை. அதில் பெரும் ஏமாற்றம் தான் கிடைத்தது.

முன்னாள் கணவரை குறித்து பேசிய ஸ்ரீதிகா.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்! | Srithika About Her Divorce In Interview

அதேபோல், ஆரியனுக்கும், அவர் முன்னாள் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அந்த நேரத்தில் நான் ஆரியனுக்கு தோழியாக தான் இருந்தேன், அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்தேன். இனி முடியாது என்ற கட்டத்தில் தான் இருவரும் பிரிந்தனர்.


அதன் பின்பு எங்கள் பெற்றோர்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறீர்களா? என்று கேட்ட உடன் தான் நாங்கள் யோசித்து திருமணம் செய்து கொண்டோம் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments