Sunday, September 8, 2024
Homeசினிமாமுருகன் பாடலை வைத்து அரசியல் செய்றீங்களா.. GOAT ட்ரெய்லர் கேள்விக்கு வெங்கட் பிரபு அதிரடி பதில்

முருகன் பாடலை வைத்து அரசியல் செய்றீங்களா.. GOAT ட்ரெய்லர் கேள்விக்கு வெங்கட் பிரபு அதிரடி பதில்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது. ரசிகர்களிடம் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

விஜய்யின் இளமையான தோற்றத்தை CG மூலமாக கொண்டு வந்திருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தி இருக்கிறது.

முருகன் பாடல் பற்றி வெங்கட் பிரபு

இந்நிலையில் சற்றுமுன் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் கூறினார்.


‘விஜய் இப்போது அரசியலில் நுழைந்து இருக்கிறார். முப்பாட்டன் முருகன் பாடலை GOAT ட்ரெய்லரில் வைத்திருப்பது அரசியலுக்காகவா’ என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

முருகன் பாடலை வைத்து அரசியல் செய்றீங்களா.. GOAT ட்ரெய்லர் கேள்விக்கு வெங்கட் பிரபு அதிரடி பதில் | Murugar Song In Goat Venkat Prabhu Reply To Issue

“கில்லி படம் பார்த்தீர்களா.. அப்போது இதே கேள்வியை கேட்டீர்களா?” என வெங்கட் பிரபு கேட்க, ‘அவர் அப்போது அரசியலுக்கு வரவில்லையே’ என பதில் வந்தது.

‘GOAT படத்தில் முருகன் பாடல் வருவது கில்லி பட reference மட்டும் தான். வேறு எதுவம் இல்லை’ என வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்து இருக்கிறார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments