மூக்குத்தி அம்மன்
நடிகை நயன்தாரா திரைப்பயணத்தில் வித்தியாசமான கதையாக அமைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கிய இப்படம் 2020ம் ஆண்டு வெளியானது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் இப்படத்தை தயாரிக்க கிரிஷ் இசையமைத்திருந்தார்.
கடவுள் மேல் இருக்கும் மக்களின் நம்பிக்கையை வைத்து நாட்டில் நடக்கும் முக்கிய விஷயம் குறித்து இப்படம் பேசியிருக்கும்.
இதில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்து அசத்தியிருப்பார், அவரது கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க படக்குழு அனுஷ்கா ஷெட்டியை தான் முதலில் அணுகியுள்ளார்களாம்.
2ம் பாகம்
கடந்த சில மாதங்களாகவே மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் குறித்த பேச்சு இடம்பெறுகிறது. இந்த நிலையில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவன தரப்பில் இருந்து 2ம் பாகம் குறித்து தகவல் வந்துள்ளது.
இந்த 2ம் பாகத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கிறாராம், இப்படத்தை சுந்தர்.சி அவர்கள் தான் இயக்க இருக்கிறாராம்.