லியாம் பெய்ன்
One Direction என்கிற பாப் இசை குழுவின் மூலம் பிரபலமானவர் லியாம் பெய்ன். இவர் இங்கிலாந் நாட்டை சேர்ந்தவர். கடந்த 2008 முதல் இவர் இசைத்துறையில் இயக்கி வருகிறார்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான தி எக்ஸ் ஃபேக்டர் நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் தனியாக பாடல்களை வெளியிட்டு வந்துள்ளார்.
மரணம்
இந்த நிலையில், பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஓட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்து அர்ஜென்டினா காவல் துறை வெளியிட்ட தகவலில் “ஓட்டல் மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது,” என்று தெரிவித்துள்ளனர்.
மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்துள்ளாராம் லியாம் பெய்ன். கடந்த ஆண்டு தனது பிரச்சனையை சரி செய்து கொள்ள பயிற்சிகளையும் எடுத்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவில் “100 நாட்கள் ஆகிவிட்டது, தற்போது நான் அருமையாக உணர்கிறேன், உண்மையில் இது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளாராம்.