சிரஞ்சீவி
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் போல தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி.
இவரது சகோதரர் பவன் கல்யாண், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், உறவினர் அல்லு அர்ஜுன் என அவரது மொத்த குடும்பமே சினிமாவில் இருக்கிறார்கள். 68 வயதிலும் மகனுக்கு போட்டியாக ஹீரோவாக அசத்தி வருகிறார்.
சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கியிருந்தார், ஆனால் அதில் அவ்வளவாக வெற்றி காணவில்லை.
சொத்து மதிப்பு
தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 1650 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு படத்துக்கு சுமார் ரூ. 45 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஹைதராபாத்தின் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமாக ரூ. 28 கோடியில் வீடு, பெங்களூருவிலும் ஒரு பிரம்மாண்ட வீட்டினை வாங்கி உள்ளார்.
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சிரஞ்சீவிக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர்.