நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
அவரை தமிழில் எப்போது நடிப்பார் என்கிற ரசிகர்கள் எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, தற்போது அவர் தெலுங்கில் தேவரா என்ற படம் மூலம் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் ஜோடியாக அதில் அவர் நடித்து இருக்கிறார்.
தமிழில் பேசிய ஜான்வி
இன்று தேவரா படத்தின் ப்ரீரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ஜான்வி அழகாக தமிழில் பேசி இருக்கிறார். சென்னை ரொம்ப ஸ்பெஷல், அம்மா உடன் இருந்த பல நினைவுகள் சென்னையில் தான் என அவர் கூறி இருக்கிறார்.
அந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இதோ..