விஜய்யின் கோட்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர்.
இவர் அதிகம் பேட்டிகள் கொடுத்து மற்ற கலைஞர்களை பற்றி பேசியது இல்லை என்றாலும் எந்த ஒரு பிரபலத்தின் பேட்டி எடுத்தாலும் விஜய் பற்றி பேசாமல் யாரும் இருந்தது இல்லை.
தற்போது விஜய்-வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரான கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது.
ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 200 கோடி சம்பளம் பெற்றதாக தயாரிப்பாளரே கூறியிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
படத்தில் விஜய்யை தாண்டி மற்ற நடிகர்கள், யுவன் ஷங்கர் ராஜா இசை போன்ற விஷயங்கள் படத்தில் ஸ்பெஷலாக பார்க்கப்பட்டது.
மொத்தமாக ரூ. 400 கோடிக்கு வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் தமிழகத்தில் மட்டுமே 19 நாள் முடிவில் ரூ. 205.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.