Friday, April 18, 2025
Homeஇலங்கை“மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

“மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு


பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அவர் கைது செய்ப்படவில்லை. அவரை விசாரிக்கும்போது, அவர் அடிப்படைவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெளிவானது. இலங்கையின் பல இடங்களிலும் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அவரைப் பற்றிய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டோம்.

விசாரணையின் முடிவில், அவர் தீவிரவாத நோக்கங்களைக் கொண்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.

இவர் உலமா சபையில் முன்னிலைப்படுத்தட்டார். பின்னர் உலமா சபை உண்மையில் அவர் ஒரு சாதாரண முஸ்லிமின் நிலையைத் தாண்டிய நிலை இருப்பதாகவும் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.

தற்போது திவிரவாத விசாரணைப் பிரிவில் (TID) அவரை 90 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்க பயங்கரவாத சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments