Tuesday, March 18, 2025
Homeசினிமாமோகன் பாபுவிற்கு சௌந்தர்யா மரணத்தில் தொடர்பு உள்ளதா?.. நடிகையின் கணவர் தகவல்

மோகன் பாபுவிற்கு சௌந்தர்யா மரணத்தில் தொடர்பு உள்ளதா?.. நடிகையின் கணவர் தகவல்


சௌந்தர்யா

கன்னட சினிமாவில் 1992ம் ஆண்டு ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை சௌந்தர்யா.

தமிழில் 1993ம் ஆண்டு Ponnumani என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன்பின் முத்துக்காளை, Dear Son Maruthu, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் அடுத்தடுத்து ஹிட் படங்கள் நடித்தார்.

கன்னடம், தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

உயிரிழப்பு


நடிகை சௌந்தர்யா அரசியல் ரீதியாக ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்தில் இறந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் நடிகை சௌந்தர்யாவின் மரணத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த புகார் வந்துள்ள நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் பாபுவிற்கு சௌந்தர்யா மரணத்தில் தொடர்பு உள்ளதா?.. நடிகையின் கணவர் தகவல் | Shocking News About Actress Soundarya Death

ஆனால் நடிகை சௌந்தர்யாவின் கணவர் ரகு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறாஅர். “மறைந்த என் மனைவியிடம் இருந்து சட்டத்துக்கு புறம்பாக எந்தவொரு சொத்தையும் மோகன் பாபு வாங்கவில்லை.”

”கடந்த 25 வருடங்களாக மோகன் பாபுவிற்கு எங்கள் குடும்பத்தை தெரியும், நல்ல உறவை பகிர்ந்து வருகிறோம்” என கூறியுள்ளார்.

மோகன் பாபுவிற்கு சௌந்தர்யா மரணத்தில் தொடர்பு உள்ளதா?.. நடிகையின் கணவர் தகவல் | Shocking News About Actress Soundarya Death

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments