Wednesday, March 26, 2025
Homeசினிமாமோசமாக ட்ரோல் செய்யப்பட்ட டான்ஸ்.. மேடையில் கண்கலங்கிய பாக்கியலட்சுமி நடிகை நேஹா

மோசமாக ட்ரோல் செய்யப்பட்ட டான்ஸ்.. மேடையில் கண்கலங்கிய பாக்கியலட்சுமி நடிகை நேஹா


பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த சீரியலில் இனியா ரோலில் நடித்து வரும் நேஹா அடிக்கடி ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் இனியா தான் ஆடிய டான்ஸுக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என கதறுவது போல காட்சிகள் சீரியலில் வந்தது. அதை வைத்து நெட்டிசன்கள் மோசமாக ட்ரோல் செய்தனர்.

இதற்கு மூன்றாம் பரிசு கொடுத்ததே தப்பு, இதுல முதல் பரிசு வேற வேணுமா என மீம் போட்டு கலாய்த்தார்கள். 

கண்கலங்கிய நேஹா

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நேஹா தான் சந்தித்த ட்ரோல்கள் பற்றி கண்கலங்கி பேசி இருக்கிறார்.

“ஒரு கட்டத்தில் நான் யாருக்கும் எதுவும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற மனநிலை எனக்கு வந்துவிட்டது. அவர்கள் என்னை பற்றி பேச பேச பேச.. எல்லாரும் மனிதர்கள் தான். இதை எடுத்துக்கொள்ள கூடாது என மனதிற்கு தெரியாது. இதெல்லாம் என்னை காயப்படுத்தியது.”

“ஆனால் அதன் பிறகு அது என்னை இன்னும் வலிமையாக மாற்றியது. கண்ணாடி முன்னாடி நின்னு நான் அழகா இருக்கிறேன் என என்னாலே சொல்ல முடியாமல் இருந்தது.”

“ஆனால் ஒருகட்டத்திற்கு பிறகு அதையும் சொன்னேன். அது என்னை வலிமையாக்கியது” என நேஹா கண்கலங்கி மேடையில் பேசி இருக்கிறார். 

மோசமாக ட்ரோல் செய்யப்பட்ட டான்ஸ்.. மேடையில் கண்கலங்கிய பாக்கியலட்சுமி நடிகை நேஹா | Baakiyalakshmi Iniya Actress Neha Reply To Trolls

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments