விஜய் டிவி ஒளிபரப்பான ஹிட்டான தொடர்களில் ஒன்று மோதலும் காதலும்.
முதலில் இந்த தொடருக்கு விக்ரம் வேதா என்று தான் பெயர் வைத்துள்ளனர், ஆனால் சில பிரச்சனைகளால் பெயரை மாற்றினர்.
இந்த தொடர் ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் கதையை போலவே உள்ளது என்ற விமர்சனத்தை பெற்றது.
பின் அதில் நடித்த நடிகர்களால் ரசிகர்களும் சீரியலை ரசித்து பார்க்க ஆரம்பித்தார்கள். இந்த தொடருக்கு பின் நாயகன் சமீர் தனது மனைவியுடன் இணைந்து Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்.
புதிய சீரியல்
இதில் நாயகியாக நடித்த அஷ்வதி மோதலும் காதலும் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மலர் தொடரில் முக்கிய நாயகி வெளியேறியதால் அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது என்ன தகவல் என்றால் அஷ்வதி புதியதாக ஒரு தொடரில் கமிட்டாகியுள்ளார், ஆனால் தமிழில் இல்லை. ஆம் அவர் Apoorvaragam என்ற மலையாள தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அந்த புரொமோவை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.