Sunday, December 8, 2024
Homeசினிமாமோதல் ஏற்பட்ட பிரிந்த சுந்தர் சி

மோதல் ஏற்பட்ட பிரிந்த சுந்தர் சி


சுந்தர் சி – வடிவேலு

இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 எனும் மாபெரும் வெற்றிப்படத்தை சமீபத்தில் கொடுத்துள்ளார். இதன்பின் இவர் இயக்கப்போகும் படம் எது என்பது குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.


இந்த நிலையில், சுந்தர் சி இயக்கும் அடுத்த படத்தில் அவரே தான் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் வடிவேலு நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.



வடிவேலுவுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்த நிலையில், திடீரென இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சுந்தர் சி படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு.

மீண்டும் இணையும் கூட்டணி


இயக்குனர் சுந்தர் சி முதன் முதலில் கவுண்டமணியுடன் பணிபுரிந்து வந்தார். பின் வடிவேலுவுடன் இணைந்தார். இவர்களுடைய கூட்டணி மாபெரும் அளவில் ஹிட்டானது. ஆனால், திடீரென இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இந்த கூட்டணி பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.


இதன்பின் விவேக் மற்றும் சந்தானத்துடன் பணியாற்றி வந்தார். சந்தானத்தை தனக்கு தெரியாமல் படத்தில் நடிக்க வைத்ததால் தான் சுந்தர் சி இடம் இருந்து வடிவேலு பிரிந்து சென்றார் என கூறுகின்றனர்.

மோதல் ஏற்பட்டு பிரிந்த சுந்தர் சி - வடிவேலு.. மீண்டும் இணையும் சூப்பர்ஹிட் கூட்டணி | Sundar C And Vadivelu To Reunite For New Movie

ஆனால், தற்போது இந்த மோதலை தள்ளி வைத்துவிட்டு மீண்டும் சுந்தர் சி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் வடிவேலு. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments