மௌனி ராய்
ஹிந்தி தொடர்கள் தமிழில் டப் செய்யப்பட்டும், ரீமேக் செய்யப்பட்டும் நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது.
அப்படி தமிழ் சினிமா இளைஞர்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பான ஹிந்தி தொடர்களில் மிகவும் ரசித்து பார்த்த ஒரு தொடர் நாகினி. பாம்பு இவ்வளவு அழகாக இருக்குமா என ரசிகர்கள் வியந்து பார்த்தார்கள்.
நாகினி 1, 2 என முக்கிய நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் மௌனி ராய். இவருக்கு ஹிந்தி ரசிகர்களை தாண்டி தமிழ் சின்னத்திரை ரசிகர்களும் அதிகம்.
குட் நியூஸ்
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாகினி தொடர் தமிழில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. வரும் ஜுலை 1ம் தேதி முதல் இரவு 9 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த தகவல் நாகினி சீரியல் ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.