Monday, March 17, 2025
Homeஇலங்கையாழில் சர்ச்சைக்குரிய யூடியூபரை பிடித்துச் சென்ற பொலிஸார்

யாழில் சர்ச்சைக்குரிய யூடியூபரை பிடித்துச் சென்ற பொலிஸார்


யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று, அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

உதவிகள் தேவைப்படுவோரிடம் நக்கல் , நையாண்டியோடு பேசியே காணொளி எடுத்து பதிவிட்டு வருபவர். அதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பி வந்தன.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் பாடசாலை மாணவியொருவரின் இரவு வேளை சென்ற குறித்த நபர், பாடசாலை மாணவியை காணொளி எடுக்க முற்பட்டுள்ளார்.

அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே, காணொளியில் நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பல்வேறு தரப்பினரும , தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இவ்வாறு உதவி செய்பவர்களின் நிதி கையாடுகைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வந்தனர்.

இந்நிலையில் குறித்த காணொளியில் காணப்பட்ட குடும்பத்தினர் பண்டத்தரிப்பு பகுதியில் வசித்து வரும், நிலையில் அவர்களுடன் சமரசம் பேச சென்ற சமயம், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து யூடியூப்பரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் , சிறுவர் நன்னடத்தை பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments