Sunday, September 8, 2024
Homeசினிமாயுவன் ஷங்கர் ராஜா மீது போலீசில் புகார்! ரூ.20 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றினாரா?

யுவன் ஷங்கர் ராஜா மீது போலீசில் புகார்! ரூ.20 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றினாரா?


யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

தற்போது விஜய்யின் கோட் படத்திற்கு அவர் இசையமைத்து இருக்கிறார், அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

போலீசில் புகார்

யுவன் ஷங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஒரு பெரிய வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக வாடகையை கொடுக்கவில்லை என அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

20 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கும் யுவன் அந்த பணத்தை தர மறுப்பதாகவும், தற்போது எந்த தகவலும் சொல்லாமல் வீட்டை காலி செய்வதாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகவல் கொடுத்தார்கள் என அந்த வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்து இருக்கிறார்.

இந்த புகார் தற்போது நுங்கம்பாக்கம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. யுவன் தரப்பு என்ன விளக்கம் சொல்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

யுவன் ஷங்கர் ராஜா மீது போலீசில் புகார்! ரூ.20 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றினாரா? | Yuvan Shankar Raja Not Paid Rent 20 Lakh Complaint

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments