Wednesday, March 26, 2025
Homeசினிமாயூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா?

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா?


மதன் கௌரி

படங்கள், தொலைக்காட்சியை தாண்டி ஒரு கலைஞன் தனது திறமையை வெளிக்காட்ட மிகவும் உதவியாக இருந்து வருகிறது யூடியூப்.

அந்த யூடியூப் மூலம் திறமைகளை வெளிக்காட்டி மக்களிடம் பிரபலம் ஆவது, மக்களுக்கு தெரியாத விஷயங்கள் கூறி ரீச் ஆவது, சமையல் வீடியோக்கள் போட்டு அனைவராலும் கவனிக்கப்படுவது என யூடியூபை பல வகையில் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

அப்படி மக்களுக்கு தெரியாத நிறைய விஷயங்களை சுவாரஸ்யமாக கூறி ரீச் ஆனவர் தான் மதன் கௌரி.

ஆரம்பம்


2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இவர் யூடியூப் பக்கத்தை திறந்துள்ளார். 7.53 Subscribers கொண்டுள்ள இவரது யூடியூப் பக்கத்தில் இதுவரை 2984 வீடியோக்கள் பதிவு செய்துள்ளார்.

யூடியூப் பக்கத்தை தாண்டி Instagram, Twitter, Linkedln போன்ற பக்கங்களையும் வைத்துள்ளார்.
கான்செப்ட்
உலகில் நடந்த, நடக்கிற, நடக்கப்போகும் விஷயங்கள் பற்றிய தகவல்களைத் தனது பேச்சாற்றலால் சுவாரஸ்யமாக முன்வைப்பவர் தான் மதன் கௌரி.

குறிப்பாக அவர் சுவாரஸ்யமான குற்றச் சம்பவங்களை மையமாகக் கொண்டு அவர் வழங்கும் வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை குவிக்கும்.

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா? | Madan Gowri Youtuber Net Worth Details In Tamil


படிப்பு

மதுரையில் பள்ளி படிப்பை முடித்தவர் இளநிலை பட்டம் பெற்றபின் கோயமுத்தூரில் எம்.பி.ஏ. நியூயார்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் அனலிடிக்ஸில் எம்.எஸ் ஆகிய பட்டங்களை வாங்கியிருக்கிறார்.

மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே வேலை செய்து வந்துள்ளார்.

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா? | Madan Gowri Youtuber Net Worth Details In Tamil


திருமணம்


மதன் கௌரி-நித்ய கல்யாணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள், விவாகரத்து ஆனது என்ற பேச்சும் உள்ளது.

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா? | Madan Gowri Youtuber Net Worth Details In Tamil

வருமானம்


ஒவ்வொரு நாளும் பல ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெறுகிறார்.

ஒரு மாதத்திற்கு 119.73 அமெரிக்க டாலரும், விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு 1.8 மில்லியனையும் மதன் கௌரி யூடியூப் மூலம் சம்பாதிக்கிறார் என கூறப்படுகிறது. 

யூடியூபர்களில் மிகவும் பிரபலமான மதன் கௌரி வருமானம் எவ்வளவு தெரியுமா? | Madan Gowri Youtuber Net Worth Details In Tamil

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments