நெல்சன் திலீப்குமார் – ஜெயிலர்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
மேலும் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாகவும் மாறியது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஜெயிலர் 2 படத்தை இயக்க இயக்குனர் நெல்சன் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஜெயிலர் 2 குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நெல்சன் திலீப்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் தனது அடுத்த படத்தை குறித்து பேசியுள்ளார்.
ரஜினியுடன் அடுத்த படம்
இதில் கூலி படத்தை முடித்தவுடன் ரஜினி சாறுடன் படம் பண்ணுவதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். ஆனால், அது ஜெயிலர் 2 என அவர் குறிப்பிடவில்லை.
ஏற்கனவே வெளிவந்த ஜெயிலர் 2 குறித்த தகவல்கள், தற்போது நெல்சன் கூறியுள்ளதை எல்லாம் வைத்து இது ஜெயிலர் 2 தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து எப்போது அறிவிப்பு வெளியாகிறது என்று.