ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக புகழின் உச்சத்தில் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய ஸ்டைலுக்கு பல கோடி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான்.
அவருடைய 73 வயதிலும் படங்களில் ஹீரோவாக நடித்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.
தற்போது, இவர் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வரும் அக்டோபர் 10 – ம் தேதி வேட்டையன் படம் வெளிவர உள்ளது. அதை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவை விட்டு விலக போகிறாரா
இந்நிலையில், உடல் நல குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு கூட இதயத்திலிருந்து உடலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது ஓய்வு பெற்று வருகிறார்.
ரஜினிகாந்துக்கு இதுபோன்ற பிரச்சனைகள் நடப்பது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே அவருக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் வேண்டாம் என ஒதுங்கிய ரஜினி, சினிமாவிலும் நடிப்பதை போகப்போக குறைத்துகொள்ள போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஆனால், இது தொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.