Tuesday, February 11, 2025
Homeசினிமாரஜினிகாந்த் படத்தில் பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன், ஆனால் கடைசியில்.. ஏ.ஆர் ரகுமான் பேட்டி!!

ரஜினிகாந்த் படத்தில் பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன், ஆனால் கடைசியில்.. ஏ.ஆர் ரகுமான் பேட்டி!!


மைக்கல் ஜாக்சன்

KING OF POP என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கும் மைக்கல் ஜாக்சனின் சாதனைகளையும், அவர் விட்டுச் சென்ற இடத்தையும் இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை.

பேட்டி


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஏ. ஆர் ரகுமான், மைக்கல் ஜாக்சன் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், கடந்த 2009 -ம் ஆண்டு நான் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள மைக்கேல் ஜாக்சனை சந்தித்தேன். அவர் மிகவும் அன்பானவர். நாங்கள் இருவரும் இசை குறித்து பேசினோம், பின்னர் அவர் அவருடைய குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்.



நான் இந்திய சென்றதும் ஷங்கரை சந்தித்து, மைக்கல் ஜாக்சன் பற்றி சொன்னேன். உடனே அவர், எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாடினால் எப்படி இருக்கும் என்றார். அதற்கு நான், மைக்கல் தமிழில் தமிழில் பாடுவாரா? என்றேன்.

இதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் தயார் செய்துகொண்டு இருக்கும் போது, மைக்கல் ஜாக்சன் உடல்நலக் குறைவால் காலமானார் என்று ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.   

ரஜினிகாந்த் படத்தில் பாட்டு பாட இருந்த மைக்கல் ஜாக்சன், ஆனால் கடைசியில்.. ஏ.ஆர் ரகுமான் பேட்டி!! | Ar Rahman Talk About Michael Jackson

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments