அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். இந்திய இராணுவத்தில் சேவை தான் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
இப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் மூலம் கமல் ஹாசன் தயாரிக்க சாய் பல்லவி கதநாயாகியாக நடிக்கிறார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளிவரவுள்ளது.
முகுந்த் வரதராஜன்
இந்த நிலையில், முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதில் “எந்திரன் படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியானது. அப்போது முகுந்த் என்னிடம் எந்திரன் படத்தை பார்க்க வேண்டும், அதுவும் என்னுடன் சேர்ந்து தமிழில் தான் பார்க்க வேண்டும் கூறிவிட்டார். அந்த நேரத்தில் முகுந்தின் மேல் அதிகாரி மற்றும் அவரது மனைவி எந்திரன் படத்தை இந்தியில் பார்க்க முகுந்த் வரதராஜனை அழைத்துள்ளனர்.
ஆனால், முகுந்த் வரதராஜன் எந்திரன் படத்தை தனது குடும்பத்துடன் சேர்ந்து தமிழில் பார்க்கப்போகிறேன் என அவர்களிடம் கூறியுள்ளார். சரி எங்களுடன் இந்தியில் ஒரு முறை பார், பிறகு அவர்களுடன் தமிழில் பார் என மேல் அதிகாரியின் மனைவி கூறினாராம்.
இல்லை அதெல்லாம் முடியாது, ரஜினியின் எந்திரன் படத்தை நான் தமிழில் தான் பார்ப்பேன், இந்தியில் பார்க்க மாட்டேன் என கோபத்துடன் கூறிவிட்டாராம். தமிழ் சினிமா முகுந்த் வரதராஜனுக்கு மிகவும் பிடிக்குமாம். அதே போல் அன்பே சிவம் படத்தையும், படத்திலும் வரும் பாடலும் அவருக்கு பிடிக்குமாம்.
அதுமட்டுமின்றி கார்த்தி நடித்து அமரன் படமும் முகுந்திற்கு மிகவும் பிடிக்குமாம். அந்த படத்தின் தலைப்பே அப்படியே முகுந்தின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு கிடைத்துவிட்டது, ரொம்ப மகிழ்ச்சி” என முகுந்த் வரதராஜனின் தந்தை அந்த பேட்டியில் கூறியுள்ளார்.