Friday, December 6, 2024
Homeசினிமாரஜினியின் அடுத்த படம்.. 33 வருடம் கழித்து இணையும் கூட்டணி!

ரஜினியின் அடுத்த படம்.. 33 வருடம் கழித்து இணையும் கூட்டணி!


நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் தற்போது வேட்டையன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். வரும் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூலி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கிறது. 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

மணிரத்னம் கூட்டணி

இந்நிலையில் ரஜினி தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.

1991ல் வெளிவந்த தளபதி படத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து தற்போது ரஜினி – மணிரத்னம் கூட்டணி சேர இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் பிறந்தநாள் அன்று இது பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ரஜினியின் அடுத்த படம்.. 33 வருடம் கழித்து இணையும் கூட்டணி! | Rajinikanth Team Up With Maniratnam After 33 Years

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments