Monday, December 9, 2024
Homeசினிமாரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்ற தளபதி விஜய்.. வைரலாகும் விஷயம்

ரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்ற தளபதி விஜய்.. வைரலாகும் விஷயம்


வேட்டையன் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்று பிரமாண்டமான முறையில் உலகளவில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.



இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா, அபிராமி, ரக்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இன்று வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க திரையுலக சேர்ந்த தனுஷ், அனிருத் போன்ற பிரபலங்கள் திரையரங்கிற்கு சென்றிருந்தனர்.

வேட்டையன் படத்தை பார்த்த விஜய்?

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் பிரபல தேவி திரையரங்கில் வேட்டையன் படத்தை பார்த்துள்ளார் என தகவல் இணையத்தில் உலா வருகிறது.

ரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்ற தளபதி விஜய்.. வைரலாகும் விஷயம் | Did Vijay Went Theatre To Watch Vettaiyan Movie

வேட்டையன் படத்தை விஜய் முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார் என கூறி வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments