சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர்களை கொண்டாடி தீர்ப்பதில் இந்திய ரசிகர்களை அடித்து கொள்ள முடியாது. தனக்கு பிடித்த நட்சத்திரங்களின் படம் ரிலீஸை திருவிழா போல் கொண்டாடுவது என எதுவும் செய்ய துணிவார்கள்.
அந்த வகையில், இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திரம் யார் என்பதை பற்றி ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அதிக ரசிகர்கள் கொண்ட நட்சத்திரம்
ஆனால், அந்த ஆய்வில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திரம் ரஜினி, கமல், அஜித், ஷாருகான் என யாரும் இல்லை.
அந்த ஆய்வின் முடிவில் அதிக ரசிகர்களை கொண்ட நட்சத்திரமாக இந்தியாவில் ஜொலித்து கொண்டு இருப்பது தளபதி விஜய் தான் என தெரியவந்துள்ளது.
தமிழ் ரசிகர்களை தாண்டி இந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விஜய் தற்போது, எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படம் தான் இவர் சினிமாவில் நடிக்கப்போகும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்திற்கு பிறகு தனது அரசியல் கட்சியான தவெகவில் முழு நேரம் கவனம் செலுத்த போகிறார்.
மேலும், ஒரு படத்திற்கு ரூ. 275 கோடி சம்பளம் வாங்கும் விஜய், சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.