இயக்குனர் ஷங்கர்
பிரமாண்ட இயக்குனர் என திரையுலகில் அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2.
1996ல் இந்தியன் முதல் பாகம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றிக்கு பின் 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் வெளிவரவுள்ளது. அடுத்த மாதம் 14ஆம் தேதி இப்படம் வெளிவரவிருக்கும் நிலையில், இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஷங்கரின் ஐடியா
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ப்ரோமோஷன் பேட்டி ஒன்றில் இந்தியன், முதல்வன் மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் வரும் ஹீரோ கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து படம் இயக்க ஷங்கர் முடிவு செய்து வைத்திருந்ததாக பேசியுள்ளார்.
இதில் “2008ஆம் ஆண்டு இந்தியன் முதல்வன் மற்றும் சிவாஜி படங்களில் வரும் ஹீரோக்களை ஒரே திரைப்படத்தில் கொண்டு வரலாம் என யோசித்தேன். இதை என்னுடைய துணை இயக்குனர்களிடம் கூறினேன். அவர்கள் என்னை பார்த்த பார்வை, ‘இவன் என்ன பைத்தியக்காரனா’ என்பது போல் இருந்தது. அதனால் அந்த ஐடியாவை நான் கைவிட்டுவிட்டேன்”