ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த்.
ரத்தநாளத்தில் ஏற்பட்டு இருந்த வீக்கத்தை சரிசெய்ய கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்திற்கு அக்டோபர் 1ஆம் தேதி சிகிச்சை நடந்து ஸ்டென்ட் பொருத்தப்பட்டு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமுடன் வீடு திரும்பி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் பதில்
இந்நிலையில், சென்னை வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் குறித்தும், கூலி படப்பிடிப்பு குறித்தும் பேசியுள்ளார்.
அதில், மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை செய்ய உள்ளது என சுமார் 40 நாட்கள் முன்பே ரஜினி சார் எங்களிடம் சொல்லிவிட்டார்.
அதன் காரணமாக கடந்த 28-ம் தேதி வரை அவருடைய காட்சிகளை மட்டும் எடுத்து முடித்துவிட்ட பிறகு தான் அவர் சிகிச்சைக்கு சென்றார்.
ஆனால், இதுபற்றி பல விதமாக யூடியூப்பில் பேசி வருகின்றனர். அந்த விஷயம் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது, ரஜினி சார் கூறுவது போல் அவர் ஆண்டவன் அருளால் நலமுடன் இருக்கிறார். கூலி படப்பிடிப்பு திட்டமிட்டபடி வரும் 15-ம் தேதி முதல் தொடங்க உள்ளோம்” என்று கூறியுள்ளார்.