திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது ஒரு நட்சத்திரத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அட இவரா
முன்னணி நடிகரின் மகளாக பிறந்து இன்று தன் திறமையாலும், உழைப்பாலும் சிறந்த பெண் இயக்குனராக வலம் வருகிறார்.
அவர் வேறுயாருமில்லை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான்.
இவர் இயக்குனர் ஆவதற்கு முன் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்பா பெரிய நடிகராக இருந்தும் அவரின் உதவி எதுவும் இல்லாமல் சொந்த உழைப்பாலும், திறமையாலும் இயக்குனர் என்ற இடத்தை பிடித்தார்.
ஐஸ்வர்யா முதலில் நடிகர் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இன்றும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
ரஜினிகாந்தும் அவரது மகளை அம்மாவாக தான் பார்க்கிறார். அதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா ரஜினியை ஒரு தாய் போன்று கவனித்து கொள்வதால் தான்.
ரஜினியின் பாசமான மகளாக வலம் வரும் ஐஸ்வர்யாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது
இணையத்தில் வைரலாகி வருகிறது.