Saturday, March 15, 2025
Homeசினிமாரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ! மேடையில் சொன்ன காரணம்

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ! மேடையில் சொன்ன காரணம்


நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் பிரபலமான ஒருவர். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பலரது கனவாக கூட இருக்கும்.

ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு தன்னை தேடி வந்தபோது நிராகரித்து இருக்கிறார் ஒருவர். மலையாள நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தான் அது.

காரணம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் எம்புரான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் பிரித்விராஜ். மோகன்லால் நடித்து இருக்கும் இந்த படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்புரான் படத்தின் விழாவில் பேசிய பிரித்விராஜ், ‘லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் தன்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பு.’

‘ஆனால் பகுதிநேர இயக்குனரான என்னால் அந்த குறிப்பிட்டேன் நேரத்திற்குள் ரஜினி சாருக்கு கதை தயார் செய்ய முடியாது என கூறிவிட்டேன்’ என பிரித்விராஜ் கூறி இருக்கிறார்.
 

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ! மேடையில் சொன்ன காரணம் | Prithviraj Rejected Offer To Direct Rajinikanth

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments