Sunday, September 8, 2024
Homeசினிமாரஜினி மனைவி மற்றும் மகள்களிடம் கேளுங்க.. ஹேமா கமிட்டி பற்றி நடிகை விசித்ரா

ரஜினி மனைவி மற்றும் மகள்களிடம் கேளுங்க.. ஹேமா கமிட்டி பற்றி நடிகை விசித்ரா


மலையாள சினிமாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை கண்டித்து பல நடிகர் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தற்போது மிகப்பெரிய அதிர்வலையை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டு அதன் தலைவரான மோகன்லால் ராஜினாமா செய்தார். இது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்த நடிகை விசித்ரா பேட்டி ஒன்றில் ஹேமா கமிட்டி குறித்து பேசியுள்ளார்.


ரஜினி எப்படி பதில் சொல்வார்..

அதில், விசித்ரா பேசுகையில், ஹேமா கமிட்டி குறித்து ரஜினியிடம் கேட்டால் எவ்வாறு பதில் கூறுவார். அவர் மனைவி மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரிடம் சென்று இந்த பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புங்கள். இதுபற்றி பல முன்னணி நடிகர்கள் பேசாமல் மௌனம் காத்து வருகின்றனர் அதற்காக இதுபற்றி பேசுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் சென்று கேட்டுக்கொண்டு இருக்க முடியாது என்று கூறினார்.

சம்பவம் நடந்தபோதே சொல்லியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். ஆனால், எனக்கு அது நடந்தபோது நான் நடிகர் சங்கம், காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லையே என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். 

ரஜினி மனைவி மற்றும் மகள்களிடம் கேளுங்க.. ஹேமா கமிட்டி பற்றி நடிகை விசித்ரா | Ask Rajinikanth Wife And Daughters Vichitra

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments