Sunday, September 8, 2024
Homeசினிமாரஜினி ரசிகரும், பிரபல நடிகருமான பிஜிலி ரமேஷ் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரஜினி ரசிகரும், பிரபல நடிகருமான பிஜிலி ரமேஷ் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்


பிஜிலி ரமேஷ்

Youtube மூலம் தற்போது பலரும் பிரபலமாகி சினிமாவில் நடித்து வருகிறார்கள். அப்படி Youtubeல் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் மிகவும் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ்.

விஜே சித்து செய்த Prank மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இவர் மீம்ஸ் வாயிலாக வைரலானார். இதன்பின் படங்களிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார். ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி, ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார்.

மரணம்



நன்றாக சினிமாவில் வளர்ந்து வந்து கொண்டிருந்த நடிகர் பிஜிலி ரமேஷுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ரஜினி ரசிகரும், பிரபல நடிகருமான பிஜிலி ரமேஷ் மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actor Bijili Ramesh Passed Away

இந்த நிலையில், தற்போது இவருடைய மரண செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆம், சமீபகாலாமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிஜிலி ரமேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை அனைவரும் அறிவோம். பிஜிலி ரமேஷின் மரணத்திற்கு ரசிகர்கள் சமுக வலைத்தளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments