பிக்பாஸ் 8
இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, இதனை அவர்களே தெரிவித்துவிட்டார்கள்.
விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் மாஸ் காட்டி வருகிறார், ரசிகர்களும் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை ரசிக்கிறார்கள்.
இந்த 8வது சீசனில் நமக்கு பரீட்சயமான நிறைய சின்னத்திரை கலைஞர்கள் தான் இடம்பெற்றுள்ளனர், எனவே ரசிகர்களும் ஆர்வமாக பிக்பாஸ் ஷோவை பார்த்து வருகிறார்கள்.
நடிகையின் பேட்டி
பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமியாக நடித்து வந்த ரஞ்சித் இப்போது பிக்பாஸில் கலந்துகொண்டுள்ளார். அவரைப் பற்றியும், அவர் எப்படி விளையாடி வருகிறார் என்பது குறித்து நடிகை ப்ரியா ராமன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், ரஞ்சித் ஆர்சகோளாறு கிடையாது. எந்த நேரத்தில் அடிக்கணும் என்று அவருக்கு தெரியும், அந்த சமயத்தில் அவர் ஜொலிப்பார்.
இப்போது கூட சமீபத்தில் ஜாக்குலினும் அவரும் செய்த தந்தை-மகள் பெர்பாமென்ஸ் பார்த்திருப்பீங்க, அவ்வளவு அழகாக ரஞ்சித் பண்ணியிருந்தார் என சீரியல் நடிகையும், ரஞ்சித் மனைவியுமான ப்ரியா ராமன் கூறியிருக்கிறார்.