ரத்தன் டாடா
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், 86 வயது ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் பதிவு
இந்நிலையில், ரஜினிகாந்த் அவர் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ஒரு பதிவை தெரிவித்துள்ளார்.
அதில், “ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களை ஊக்கப்படுத்திய ஒரு புனிதமான மனிதர் ரத்தன்.
பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து அனைவராலும் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்ட மனிதர் தற்போது இல்லை என்பதை நினைக்கும் போது மனம் வேதனை கொள்கிறது.
உங்களுடன் இருந்த ஒவ்வொரு நொடியையும் என் வாழ் நாள் முழுவதும் போற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.