கங்கனா ரனாவத்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். அது மட்டும் இல்லாமல் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர் கங்கனா.
இவர் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து அதன்முலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.
விளக்கம் கொடுத்த கங்கனா
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட கங்கனா அங்கு ரன்பீர் கபூர், அக்ஷய் குமார் மற்றும் கான்கள் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு இவர்களை மிகவும் பிடிக்கும் எனவும், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்காது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஒரு படத்தில் ஹீரோவால் தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பது முற்றிலும் பொய். அதை நிரூபிக்கவே நான் இவர்கள் படங்களில் நடிக்க மறுத்து விட்டேன் என்று அந்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.