Wednesday, October 9, 2024
Homeசினிமாரன் பேபி ரன் படத்தின் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஆர்யா.. அடேங்கப்பா பட்ஜெட் இத்தனை கோடியா?

ரன் பேபி ரன் படத்தின் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஆர்யா.. அடேங்கப்பா பட்ஜெட் இத்தனை கோடியா?


நடிகர் ஆர்யா 

விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

அதன் பிறகு, நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம் என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்தார்.

ஆர்யா நடிக்கும் புது படம் 

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில், தற்போது ரன் பேபி ரன் படத்தின் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தை மார்க் ஆண்டனி மற்றும் எனிமி ஆகிய படங்களை தயாரித்த வினோத குமார் தயாரிக்கிறார்.

ரன் பேபி ரன் படத்தின் இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் ஆர்யா.. அடேங்கப்பா பட்ஜெட் இத்தனை கோடியா? | Arya Next Movie With Run Baby Run Director

கடந்த வாரம் ராமநாதபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், சுமார் ரூ. 70 கோடி பட்ஜெட்டில் தற்போது இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஆர்யா நடித்த படங்களிலே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments