சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியின் ஹிட்டான தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை.
அண்ணாமலை என்பவரின் குடும்பத்தை வைத்தே இந்த கதை இத்தனை மாதங்களாக படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முத்து-மீனா தான் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் கியூட் ஜோடி.
தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து விரைவில் ரோஹினி பற்றிய உண்மையை தெரிந்துகொண்டு வீட்டில் கூறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஆனால் பொறுத்திருந்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண்போம்.
கியூட் புரொமோ
இன்றைய எபிசோட் கடைசியில் ரவியிடம், ஸ்ருதி தன்னை காதலிக்கிறாய் என்றால் இந்த வீட்டை என்னை தூக்கிக்கொண்டு 3 முறை சுற்று என்கிறார். அவரும் ஓகே என்று கூறி ஸ்ருதி தூக்கி சுற்ற இதைக்கேட்ட முத்துவும் மீனாவை தூக்கி சுற்றுகிறார்.
வீட்டிற்கு வேலை முடித்துவந்த மனோஜ் ரோஹினினை தூக்கி சுற்ற, 3 ஜோடியும் இப்படி இருப்பதை கண்டு விஜயா ஷாக் ஆகிறார். இதோ கியூட்டான புரொமோ,