Saturday, April 26, 2025
Homeசினிமாராஜமௌலி படங்கள் மீது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால்.. பாகுபலி ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார்

ராஜமௌலி படங்கள் மீது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால்.. பாகுபலி ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார்


ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்ட ஹிட் படங்கள் கொடுத்து இந்திய அளவில் மட்டுமின்றி ஹாலிவுட் வரையும் பிரபலம் ஆகி இருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

இப்படி ராஜமௌலியின் பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் தான் KK செந்தில் குமார். அவர் மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அடுத்து மகேஷ் பாபு உடன் ராஜமௌலி மீண்டும் அவர் கூட்டணி சேரும் நிலையில், அந்த படத்திற்கும் செந்தில் குமார் தான் ஒளிப்பதிவாளர்.

தயக்கம் இருந்தது..

செந்தில் குமார் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “நான் பிலிம் ஸ்கூலில் படித்தவன், ஆரம்பத்தில் ராஜமெளலி எடுக்கும் மாஸ் காட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதனால் எடுப்பது கஷ்டமாக இருந்தது. அனைத்திலும் லாஜிக் இருக்க வேண்டும் என நினைத்தேன்.”

“ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து நான் சினிமாவை பார்க்கும் விதத்தை மாற்றிக்கொண்டேன். தற்போது இருக்கும் டெக்னாலாஜி மற்றும் கிடைக்கும் பெரிய பட்ஜெட் மூலமாக எவ்வளவு பிரம்மாண்ட காட்சியையும் எடுக்க முடியாது.”

இவ்வாறு செந்தில் கூறி இருக்கிறார். 

ராஜமௌலி படங்கள் மீது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது, ஆனால்.. பாகுபலி ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார் | Kk Senthil Kumar About Rajamouli Films

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments