ராதிகா சரத்குமார்
தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத ஒரு நடிகராக வலம் வருபவர் எம்ஆர் ராதா.
இவரது மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் தான் ராதிகா. அதன்பிறகு அவரது ஸ்டைலில் சினிமாவில் செம ராஜ்ஜியம் நடத்தினார்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் ராடான் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவர் தயாரித்து, நடித்த எல்லா சீரியல்களும் செம ஹிட்.
புதிய தொடர்
சன் டிவியுடன் கூட்டணி அமைத்து 10 வருடங்கள் இந்த தொலைக்காட்சியில் இவரது தயாரிப்பில் தயாரான ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின. பின் விஜய் டிவி பக்கம் வந்து ஒரு சீரியலை தயாரிக்க அது சரியாக ஓடவில்லை.
அப்படியே கலைஞர் தொலைக்காட்சியில் Ponni C/o Rani என்ற சீரியலை தயாரித்தார், இப்போது இதுவும் முடிந்துவிட்டது. தற்போது மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியிலேயே அடுத்த தொடரை தயாரிக்க இருக்கிறாராம் ராதிகா.
ஆனால் யார் நடிக்கப்போவது, தொடர் பெயர் என்ற எந்த விவரங்களும் தெரியவில்லை.