Monday, February 17, 2025
Homeசினிமாராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் விஜய்.. என்ன செய்கிறார் பாருங்க

ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் விஜய்.. என்ன செய்கிறார் பாருங்க


 விஜய்

தளபதி விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். அதனால் தன்னுடைய கடைசி படமாக தளபதி 69ஐ அறிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறார்கள்.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

விஜய் செய்த செயல்

தளபதி 69 படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது சென்னையில் ஆபீசர் அகாடமியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அகாடமியில் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருவதால் அங்கு பயற்சி பெரும் ராணுவ அதிகாரிகளின் குடும்பம் விஜய்யை சந்திக்க எண்ணிய நிலையில் உடனடியாக ராணுவ வீரர்களை சந்திக்க விஜய் சென்றுள்ளார்.

ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் விஜய்.. என்ன செய்கிறார் பாருங்க | Vijay With Army People Family

அங்கு மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின், ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்த விஜய் அவர்களுடன்  உரையாடி அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருடன் விஜய்.. என்ன செய்கிறார் பாருங்க | Vijay With Army People Family

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments